/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajini_170.jpg)
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, நயன்தாரா, ஜெகபதி பாபு எனபலரும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படம், தீபாவளி அன்று திரையரங்கில் வெளியானது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சில யூடியூப் சேனல்கள் படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தன.
இந்நிலையில் இயக்குநர் பேரரசு 'அண்ணாத்த' படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "திரைப்படத்தில் நிறை குறை இருக்கத்தான் செய்யும், அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு வன்மத்தோடும் வக்கிரத்தோடும்நாகரீகமற்று சிலர் விமர்சனம் செய்வது வேதனை அளிக்கிறது. சில யூடியூப் சேனல்களின் விமர்சனம் தரம்தாழ்ந்து போய்விட்டது, இருந்தும் 'அண்ணாத்த' வெற்றி அண்ணாந்துபார்க்க வைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படத்தில் நிறைகுறை இருக்கத்தான் செய்யும். அதை தேசத்துரோக ரேஞ்சுக்கு
வன்மத்தோடும்,வக்கிரத்தோடும்,நாகரிகமற்றும் சிலர் விமர்சனம் செய்வது
வேதனையாக இருக்கிறது!
சில யூட்யூப் சேனல் விமர்சனம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது!
இருந்தும் அண்ணாத்த வெற்றி அன்னாந்து பார்க்க வைக்கும்! pic.twitter.com/1Tne5lPwwS
— PERARASU ARASU (@ARASUPERARASU) November 6, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)