Advertisment

"தொடர்ந்து சமூக நீதி பேசுவோம்...." - பா. ரஞ்சித்தின் புதிய முயற்சி

Advertisment

director paranjith started pk Rosy Film Festival

சமூக கருத்துக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வரும் இயக்குநர்களில்முக்கியமானவர் பா.ரஞ்சித். இவரின்நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா மற்றும் பி.கே. ரோசி திரைப்படவிழா இன்று சென்னையில்தொடங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து வரும் 11 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவின்தொடக்க விழா வடபழனி பிரசாத் ஸ்டுடியோ திரையரங்கில் தொடங்கப்பட்டது.

Advertisment

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "இந்திய சினிமாவில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சினிமா படங்கள் மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகிறது. கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டு செல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பார்வையாளராக, படைப்பாளிகளாக நாம் அதை எவ்வாறு அணுகுகிறோம். சமூகத்தில் பிரதிபலிப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. நாம் சினிமாவை எப்படி அணுக வேண்டியதாயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சமூக அக்கறையோடு, சமூக நீதி பேசும் படங்கள் இந்திய சினிமாவில் சமீப காலங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அப்படி சமூக நீதியை பேசும் படங்களைஒரே திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என்கிற நோக்கில் இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக நீதியை பேசுவோம் என்றார்.

film festival Pa Ranjith
இதையும் படியுங்கள்
Subscribe