கபாலி, காலானு தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இரண்டு படங்கள் செய்தார் இயக்குனர் பா.ரஞ்சித். அடுத்ததாக அவர் யாருடன் படம் பண்ணப் போறாரென்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மனதில் இருந்தது. அந்தக் கேள்விக்கு இப்போ பதில் கிடைச்சுருக்கு.
ஆனால் ரஞ்சித் தன் அடுத்த படத்தை தமிழில் எடுக்கவில்லை. ஹிந்தியில் தன்னுடைய முதல் படத்தை இயக்கப் போகிறார் ரஞ்சித்.
'அட்டகத்தி' படம் மூலமாக அறிமுகமான ரஞ்சித், அந்தப் படத்தில் இருந்தே தன்னுடைய அரசியலை தன் படங்களில் வெளிப்படுத்தி வருகிறார். அட்டகத்திக்கு பிறகு வந்த 'மெட்ராஸ்' படம் அந்த அரசியல இன்னும் ஆழமாகப் பேசியது. அந்த வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் யாருடன் படம் பண்றார்ன்னு பார்ப்போம்னு எல்லோரும் காத்துக்கொண்டிருந்த சமயத்தில், சற்றும் எதிர்பாரா வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கப் போகிறார் என்ற செய்தியும் 'கபாலி' என்று படத்தின் டைட்டிலும் வந்தது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
'மறுபடியும் பழைய ரஜினிய பாக்கப் போகிறாம்'னு ரஜினி ரசிகர்கள் சந்தோஷப்படும் அளவுக்கு ட்ரைலர், டீசர் வந்தது. பல வருடங்களுக்குப் பிறகு ஆக்சனிலும் காதலிலும் ரஜினி என்னும் நடிகரை மறுபடியும் நம்ம கண் முன்னே காட்டியது கபாலி.அதே நேரம் படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் வரத் தவறவில்லை. எதற்கும் ரஞ்சித் பதில் சொல்லாமல் இருக்க, ரஜினியின் அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு வந்தது.
வயதான கெட்டப்பில் ரஜினி, பேரக்குழந்தைகள், கண்ணம்மா, நேரடியான அரசியலென்று 'காலா' இயக்குனர் ரஞ்சித்தின் நேரடியான அரசியல் படமாக இருந்தது. வசூலில் முந்தைய ரஜினி படங்கள் அளவுக்கு இல்லையென்ற பேச்சும் வர, ரஜினியின் அரசியல் ஸ்டேட்மென்ட்கள் படத்துடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டன. ரஜினியின் அடுத்த படம் கார்த்திக் சுப்புராஜுடன் என்று முடிவாகி படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் கிளம்பி சென்றுவிட ரஞ்சித்தின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மீண்டும் ஒருமுறை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹிந்தியில் அறிமுகமாகிறார் இயக்குனர் ரஞ்சித். சன்னி லியோனின் பயோ படத்தைத் தயாரித்த நமா பிக்சர்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இதே நிறுவனம் சமீபத்தில், இரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் 'Beyond the clouds' படத்தை தயாரித்தார்கள்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
ஜிக்னேஷ் மெவானியுடன் சந்திப்பு, நட்பு, ராகுல் காந்தியுடன் சந்திப்பு என்று அரசியல் ரீதியாக ஏற்கனவே வடக்கை நோக்கி சென்றுவிட்ட ரஞ்சித், தற்போது சினிமாவிலும் தமிழைத் தாண்டிச் செல்கிறார். அங்கு இவர் படங்கள் பேசும் அரசியல் எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதைத் தாண்டி, ஹீரோ யார், ஹீரோயின் யார்,ரஞ்சித் கூடவே சந்தோஷ் நாராயணனும் ஹிந்திக்குப் போகிறாரா என்ற தகவல்களெல்லாம் இனிதான் தெரியவரும்.