Advertisment

இயக்குநர் பாண்டிராஜிடம் ரூ. 1.89 கோடி பண மோசடி - போலீசார் அதிரடி

director pandiraj land issue

Advertisment

பிரபல திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் 1 ஏக்கர் 43 சென்ட் பரப்பளவில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாகபுதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்த நில தரகர் குமார் என்பவர் உறுதியளித்துள்ளார். அதன்படி பாண்டிராஜ் முதல் தவணையாக ரூ.40 லட்சம் பணத்தை குமாருக்கு கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து குமார் இன்னும் 50 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதாக பாண்டிராஜிடம் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் ரூ.27 லட்சம் பணத்தை குமாரிடம் பாண்டிராஜ் கொடுத்துள்ளார். இப்படி 2013 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நிலம் தொடர்பாக ரூ.1 கோடியே 89 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் புதுக்கோட்டைக்குச் சென்று தான் வாங்கவுள்ள நிலத்தை பார்வையிட சென்றுள்ளார் பாண்டிராஜ். அங்கு சென்று பார்த்த பிறகு, அந்த இடம் வேறொரு நபரின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டிராஜ் இது தொடர்பாக புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த இடம் ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த நில மோசடி தொடர்பான வழக்கில் நில தரகர் குமாரை கைது செய்துள்ளனர் போலீசார்.

pudhukottai director pandiraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe