Advertisment

"மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது" - இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சு! 

director pa ranjith talk about makkalisai 2021

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கடந்த 18ஆம் தேதி ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தாரை தப்பட்டை, மேளம், கரகாட்டம் மற்றும் ஒப்பாரி பாடகர்கள்என தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இயக்குநர் பா. ரஞ்சித், சிறப்பு விருந்தினர்களாகசு. வெங்கடேசன் எம்.பி, சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர்பா. ரஞ்சித், "‘மார்கழியில் மக்களிசை’ பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வு வரும் 24 முதல் 31ஆம் தேதிவரை 7 நாட்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு சபாக்களில் சென்னையில் நடைபெற இருக்கிறது. நாட்டுப்புற இசைக்கலையை மக்களுக்கானதாக மாற்றுவதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளோம். மக்களுக்கான இசையை மக்களிடத்தில் கொண்டு செல்கிறோம். மார்கழி என்பது தமிழ் மாதம், இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது.மங்கள இசையும் நாட்டுப்புற இசையும் நம் மண் சார்ந்ததுதான். நாட்டுப்புற பாடல்கள் வாழ்வியல் சம்பந்தப்பட்ட தினசரி விஷயங்களைஇசை வடிவமாக கொண்டுவருவதுதான், இதனை சிஸ்டமாக உருவாக்கி வைத்துள்ளோம். தற்போது அதற்கான இடம் கிடைத்துள்ளது. சினிமா இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு போன்று மண் சார்ந்த இசைக் கலைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புதான் இந்த ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி.நாட்டுப்புற இசையை வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதுதான் இந்த நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பு. இந்த நிகழ்வை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும்போது ஆதரவு கிடைக்குமா என எண்ணிய நிலையில், மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

makkalisai 2021 Pa Ranjith su venkatesan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe