Skip to main content

"நான் எதை பார்த்து சினிமாவிற்கு வந்தேனோ, அதை இந்த சமூகம் எடுக்க விடவில்லை" - பா. ரஞ்சித் உருக்கம்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

director pa ranjith talk about kuthirai vaal fim

 

இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ரைட்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் நடித்துள்ள குதிரைவால் படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  - ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படம் மார்ச் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித், கலையரசன், இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன்  - ஷ்யாம் சுந்தர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், "ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவில் பல வகைகள் இருக்கு, அதைப் பார்த்துத் தான் சினிமாவுக்கே நான் வந்தேன். நான் பார்த்த சினிமாவால் பாதிக்கப்பட்டு சினிமா எடுத்தேனா என்றால், இந்த சமூகம் அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களைப் பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிகச் சந்தோஷமாகத் தான் செய்துகொண்டிருக்கிறேன். அது இந்த சமூகத்தில் நிறையக் கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன். மற்றபடி ஒரு கலைஞனாக என்னுடைய சினிமா விருப்பம் வேறு விதமானது. இயக்குநர் மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக இருந்தது. அந்த குறும்படத்தின் மேக்கிங் போன்ற அம்சங்கள் என்னை வெகுவாக கவர்ந்ததோடு, மனோஜ் மீது மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. எனக்கு பொதுவாகத் தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாகச் சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோலத் தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. அது ரொம்ப பிடித்திருந்தது" என்றார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், "சினிமா இன்று இருக்கும் சூழலில் திரையரங்கை விட ஒடிடி-யில் படத்தை வெளியிடலாம் என்று நான் கூறினேன். என்னுடைய ‘ரைட்டர்’ படம் கூட திரையரங்கில் வெளியாகிப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதனால், குதிரைவால் படத்தை ஓடிடி-யில் வெளியிடுவது பற்றி ஆலோசிக்குமாறு கூறினேன். ஆனால், விக்னேஷ் இந்த படத்தைத் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், என்று உறுதியாக இருந்தார். காரணம், இந்த படம் திரையரங்க ரசிகர்களுக்கான படம். அவர்களுக்கான புதிய விஷயத்தைச் சொல்லும் படம். எனவே, ரசிகர்கள் இந்த படத்தைத் தவறவிடக் கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அப்படி ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் படமாக குதிரைவால் இருக்கும் என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.  

Next Story

ரிலீஸுக்கு ரெடியான ‘ஹாட்ஸ்பாட்’ (புகைப்படங்கள்)

Published on 19/03/2024 | Edited on 20/03/2024

 

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கேஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.