தமிழ் சினிமாவில் தனக்கெனஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விக்ரம். கடாரம் கொண்டான் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் மகான், அஜய் ஞானமுத்து இயக்கும்கோப்ரா, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார். இயக்குநர்பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்பேட்டா பரம்பரை திரைப்படம் பெரும் வெற்றி பெற்று விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளை பெற்றது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'சியான் 61' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோக்ரீன்நிறுவனம் சார்பில் கே.இஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.