தமிழ்நாடு அரசின் சார்பில் 2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-16 முதல் 2021-2022 வரையான கல்விஆண்டுகளுக்குரிய எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவற்றை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “திரைப்பட விருதுகளுக்காக நடிகர்கள் விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரை விருதுகளுக்காக நடிகர்கள் எம். இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய்ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சின்னத் திரையின் சிறந்த கதாநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

Advertisment

நடிகைகள் ஆர்.ராதிகா சரத்குமார், வாணிபோஜன், நீலிமாராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானாஷாஜகான், கெபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சின்னத்திரையின் சிறந்த  கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அழகி, ரோமாபுரி பாண்டியன். இராமனுஜர். நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் சிறந்த நெடுந்தொடர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப்பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசு ரூ.1.25 இலட்சமும் வழங்கப்படுகிறது.  அதோடு . சிறந்த நடிகர் அல்லது நடிகையர் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. 

tn-sec

தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 இலட்சமும். இரண்டாம் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் வழங்கப்படுத்துடன், சிறந்த கதாநாயகன் அல்லது கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கம். நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் அனைத்தை13. 02. 2026 அன்று மாலை 04.30 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில்  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், விருதாளர்களுக்கு வழங்கிப் பாராட்டுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி?. தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.