விருப்பத்தை சொன்ன நெல்சன்; தம்ஸ் அப் காண்பித்த அல்லு அர்ஜுன்

director nelson about pushpa 2 movie

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில்சென்னையில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் பங்கேற்றார்.

அப்போதுநெல்சன் பேசுகையில், “புஷ்பா 2 படத் தயாரிப்பாளரிடம் பார்க்கும் போதெல்லாம் படம் எப்போது ரிலீஸ் ஆகுமென்று கேட்பேன். எனக்குத் தெரிந்து அதிலே 2 வருடம் போய்விட்டது. புஷ்பா படத்தைப் பார்த்தபோது, எனக்கு ரொம்ப பயங்கரமாக கனெக்ட் ஆனது, அல்லு அர்ஜூன் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. புஷ்பா படத்துக்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அல்லு அர்ஜூன் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. நான் அவரை சந்தித்தபோது புஷ்பா 2 படத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். அதனால்தான் இன்றைக்கு இந்தியாவே புஷ்பா 2 படத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

டிசம்பர் 5ஆம் தேதி இந்த படத்தைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஒரு கமர்ஷியல் படத்தை இந்த அளவிற்கு பெரிதாக அனைவரிடமும் சேர்க்க முடியுமா என்று நினைக்கும்போது புஷ்பா போன்ற படங்கள் அதற்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவின் படங்களைப் பார்த்து வருகிறேன். ஒவ்வோரு படத்திற்கும் அவரது நடிப்பு ஆண் நடிகர்களுக்கு ஈடாக இருக்கிறது. இப்படத்தின் ரிலீஸூக்கு பிறகு கமர்ஷியல் சினிமாவின் போக்கு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும்.

‘புட்ட பொம்மா...’ பாடலைப் பார்த்தபோது அல்லு அர்ஜூன் மாதிரி யாரும் நடனம் ஆட முடியாது என்று தோன்றியது. அவரால் மட்டும்தான் அதுபோல முடியும். திரையில் அதைப் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருக்கும். அல்லு அர்ஜூனை வைத்து நேரடியாக ஒரு தமிழ்ப் படம் பண்ண வேண்டும். ஏனென்றால் நம்மைப் போல அவரும் மிகவும் அழகாகத் தமிழ் பேசுவார். அவர் நினைத்தால் அவரே பேசி தமிழில் நடிக்க முடியும்” என தனது விருப்பத்தை தெரிவித்தார். அதன் பிறகு தொகுப்பாளர் நெல்சனிடம் அல்லு அர்ஜூனை வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு “அல்லு அர்ஜூன்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். அப்போது மேடைக்குக் கீழிருந்தஅல்லு அர்ஜூன் தம்ஸ் அப் சிம்பிளை காண்பித்தார். முன்னதாக அல்லு அர்ஜூனுன் நெல்சனும் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

allu arjun
இதையும் படியுங்கள்
Subscribe