Advertisment

அருண்விஜய் அடித்த அந்தர்பல்டி... மிரண்டுபோன ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்!

arun vijay

‘மூடர் கூடம்’ படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நவீன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் ‘அக்னி சிறகுகள்’. அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி. சிவா தயாரிக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்டு, இப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு, படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, கொல்கத்தா மற்றும் யூரோப்பில் படப்பிடிப்புபை நடத்தியது. பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் பலமுறை தடைப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் பணிகள் மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து இயக்குநர் நவீன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அருண்விஜய் தனக்கு தெரிந்த அந்தர்பல்டிகளை அடித்துகாட்டி ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் விக்டர் இவனொவ்வை மிரளவைத்தபின், 'உனக்கு ரிகர்சலே தேவயில்ல தம்பி, நீ கிளம்பு’ என சொன்னதுக்கப்புறம், கேமிராமேன் கே.ஏ. பாட்சா கூட சேந்து எடுத்துகிட்ட புகைப்படம்" எனக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றைப்பகிர்ந்துள்ளார்.

Advertisment

arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe