Advertisment

ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி; மிஷ்கின் எடுத்த திடீர் முடிவு

Director Mysskin Removed 15 Mins Nude Scene andrea jeremiah Form Pisasu 2

Advertisment

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவின் 15 நிர்வாண காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் படத்தின் தேவைக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சி பிசாசு 2 படத்தில் வைக்கப்பட்டது என்றும், பிறகு குழந்தைகள் இந்த படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் நிர்வாண காட்சிகளைப் படத்திலிருந்து நீக்கியதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Andrea Jeremiah director mysskin pisasu part 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe