துப்பறிவாளன் படத்திற்கு பின் இரண்டு வருடங்கள் கழித்து மிஷ்கின் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் படம் சைக்கோ. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்திற்கு பி.சி.ராம் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார் பின்னர் அவர் விலகிக்கொள்ள அவருடைய உதவி ஒளிப்பதிவாளர் தன்வீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.

Advertisment

myskin

இந்நிலையில் இந்த படம் தொடர்பாக இயக்குனர் மிஷ்கின் நமக்கு அளித்த பேட்டியின்போது சைக்கோ படம் குறித்தும், அவரது தனிப்பட்ட சமூக பார்வை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம் உதயநிதியின் நடிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர், “ அவருடைய முந்தைய படங்களை நான் பார்த்ததில்லை. முதலில் நான் அவரை நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அடுத்த படங்களில் நடித்துக்கொள்ளுங்கள். என்ன இருக்கிறதோ அதை மட்டும் பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் சொன்னதை மட்டும்தான் அழகாக செய்தார். மடியில் அமர்ந்துக்கொண்ட குழந்தைபோல எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் விஷால்தான் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால், உதயநிதியுடன் ஒப்பிட்டால் விஷால் செய்ததால் கணிக்கிடவிடவே முடியாது. உதய் ஒரு தங்கம்.