விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணைந்த முத்தையா ... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Director Muthaiah has written the screenplay Vikram Prabhu tiger film

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு இயக்குநர் தமிழ் இயக்கும் 'டாணாக்காரன்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும்இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் 'டைகர்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சாம்சி.எஸ் இசையமைக்க, திரைக்கதை மற்றும் வசனத்தைஇயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (1.2.2022) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர்முத்தையா இயக்கத்தில் வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்தற்போது 'டைகர்' படத்திற்கு முத்தையா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

tiger movie vikram prabhu
இதையும் படியுங்கள்
Subscribe