“இந்து மதம் ஒன்றிணைய கூடாது என்று நினைக்கிறார்கள்” - இயக்குநர் மோகன் ஜி 

director mohan g talk about rajaraja cholan

அண்மையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு, “திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர்” என பேசியிருந்தார். இதையடுத்து இவரின் பேச்சுக்குஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

இதையடுத்து ராஜராஜ சோழன் இந்துதான் என்று ஒருதரப்பும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று ஒரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். இதனிடையே சோழர்கள் காலத்தில் சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் மட்டுமே இருந்தது என்றும், வெள்ளைக்காரர்கள்தான் இந்துமதம் என்றபெயரைவைத்ததாகவும்கமல்ஹாசன், கருணாஸ் உள்ளிட்ட பலரும் கூறி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் இந்து சமய அறநிலையத்துறை, என்ற பெயரை மாற்றி சைவ மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்றுவைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர்மோகன் ஜி, "இந்து சமய அறநிலைத்துறைஎன்ற பெயரையாராலும் மாற்ற முடியாது. யாரும் இந்து இல்லை என்று கூற முடியாது. என்னுடைய சான்றிதழில் இந்து என்றுதான் இருக்கிறது. இந்து மதம் இல்லை என்று சொல்கிறவர்களின் சான்றிதழ்களைவாங்கி பார்த்தால் கூட இந்து என்றுதான் இருக்கும். ராஜராஜ சோழன் இந்துதான். அவரை சைவ மதம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், ராஜராஜா சோழன் காலத்தில் உள்ள சிற்பங்களில் கணபதியம் பற்றி கூறியிருக்கிறார், அதே போன்று பெருமாள், விஷ்ணு கோவில்களுக்குகொடை வழங்கியிருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் அவரை எப்படி ஒரு மதம் என்று அடையாளப்படுத்த முடியும். ஆகையால் அதை அனைத்தையும் இணைத்து ராஜராஜ சோழனை இந்து என்றுசொல்லுவதுதான் சரியாக இருக்கும்.இன்றைய காலகட்டத்தில் இந்து மதம் ஒன்றிணைய கூடாது என்று திட்டமிட்டு ராஜராஜ சோழன் இந்து இல்லை என்று விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளைக்காரர்கள்தான் இந்து என்று பெயர் வைத்ததாகசொல்கிறார்கள். ஆனால் சங்க காலத்தில்இருந்தே இந்து என்ற பெயர் இருக்கிறது. ஆதாரம் வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில்தருகிறேன் எனவும்கூறியுள்ளார்.

mohan g Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe