ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) தாய்லாந்தில் இருந்த போது இன்று (04/03/2022) ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்.145 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் (708) வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குரியவர் வார்னே. தனது மாயாஜால பந்துவீச்சால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஷேன் வார்னே.ஷேன் வார்னே மறைவுக்குஉலகம் முழுவதும் உள்ளகிரிக்கெட் அணியின் வீரர்கள், அவரது ரசிகர்கள்ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில்இயக்குநர்மாரி செல்வராஜ்ஷேன் வார்னே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "கிரிக்கெட்டை முதன்முதலாய் ஊருக்குள் கற்று தந்த அண்ணன்மார்கள் கதாநாயகனாய் சச்சினை காட்டினார்கள் வில்லனாய் வார்னேவை தான் காட்டினார்கள். அன்றிலிருந்து வாழ்வோடு சுழன்ற முகம் நீங்கள் வார்னே" எனக் குறிப்பிட்டுள்ளார்.