"நான் உங்களுடைய ரசிகன்"- இளம் இயக்குனரிடம் தெரிவித்த மணிரத்னம் 

அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இயக்குனர் மணிரத்னம் தனது மனைவியின் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாகரசிகர்களுடன் நேரடியாககலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலானது சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடிக்க, பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம்.

maniratnam

ரசிகர்களுடன் மணிரத்னம் கலந்துரையாடியபோது, பிரபல மலையாள இயக்குனர் லிஜோ பெல்லிசரியும் அந்த லைவ் வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று சுஹாசினி சுட்டிக்காட்டி, உங்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனரும் இதை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

nakkheeran app

அதனையடுத்து பேசிய மணிரத்னம், “நான் உங்களுடைய ரசிகன். இந்த காலகட்டத்தின் சிறந்த இயக்குனராக இருக்கிறீர்கள். வாழ்த்துகள்” என்றார்.

மேலும் “அவருடைய படங்களில் நான் ஒன்றுதான் பார்த்திருக்கிறேன், மணிரத்னம் நிறைய படங்கள் பார்த்திருக்கிறார்” என்று அவருடைய படங்களின் பெயரைசுஹாசினி சொல்ல,மணிரத்னமும் அங்கமாலி டைரீஸ், ஆமின்படங்களின் பெயரைகுறிப்பிட்டுமுடித்தார்.

maniratnam
இதையும் படியுங்கள்
Subscribe