/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1352.jpg)
'8 தோட்டாக்கள்', 'ஜீவி' உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்துப் பிரபலமானவர்வெற்றி. இவர் தற்போது 'ஜோதி' படத்தில் நடித்துள்ளார். ராஜா சேதுபதி தயாரித்துள்ள இப்படத்தை கிருஷ்ணா பரமாத்மா இயக்கியுள்ளார். ஷீலா, பூஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டுபேசிய படத்தின் இயக்குநர் கிருஷ்ணா, "இப்படம் ஒரு உண்மை சம்பவம் மட்டுமல்லாமல் பல உண்மை சம்பவங்களையும் உள்ளடக்கியது. வருஷத்துக்கு 40000 குழந்தைகள் தொலைந்து அதில் 11000 குழந்தைகள் கண்டுபிடிக்க படாமலே போகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 173 குழந்தைகள் காணாமல் போகிறது. இப்படம் ஒரு ஆணோட கோபத்தைவிட ஒரு பெண்ணோட அமைதி ரொம்ப ஆபத்தானது என்று நிச்சயமாக உணர்த்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)