Advertisment

"எப்போ வேணாலும் அருவாவை கையில் எடுக்கலாம்" - சூர்யா படம் குறித்து ஹரி சூசகம் 

director hari talk about surya aruvaa film

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யானை'. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' படத்தில் கருடனாக நடித்த ராம் வில்லனாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று(30.5.2022) சென்னையில் நடைபெற்ற நிலையில் இயக்குநர் ஹரி, அருண் விஜய் உள்ளிட்ட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதனிடையே சூர்யா - ஹரி கூட்டணியில் 'அருவா' என்ற படம் உருவாவதாக இருந்த நிலையில் அது பாதியில் நிறுத்தப்பட்டது. நேற்று நடைபெற்ற 'யானை' பட விழாவில் சூர்யாவின் 'அருவா' படத்தின் கதையை 'யானை' என்ற பெயரில் அருண் விஜய்யை வைத்து இயக்கியுள்ளீர்களா என்ற கேள்வி ஹரியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அருவா படத்தின் கதையை வேறு யாரையும் வைத்து எடுக்கவில்லை. சில காரணங்களுக்காக அருவா படம் தள்ளிப் போயுள்ளது. அருவா இன்னும் அங்கேதான் இருக்கும் எப்போது வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கலாம்" என சூர்யா படம் குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். மேலும் யானை படத்தின் கதைக்கும் அருவா கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றும்தெரிவித்துள்ளார்.

Advertisment

actor surya arun vijay Aruva director hari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe