director hari speech in Theerkadharishi  press meet

Advertisment

பி.சதீஷ்குமார் தயாரிப்பில்மோகன் - சுந்தரபாண்டி இயக்கத்தில்சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில்உருவாகியுள்ள படம் 'தீர்க்கதரிசி'. கமர்ஷியல் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில்படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டு பேசினர்.

இயக்குநர் ஹரி பேசியதாவது, “படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்“ என்றார்.

நடிகர் அஜ்மல் பேசியதாவது, “சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும்" என்றார்.

Advertisment

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “இது போன்ற சிறிய படங்கள் செய்யதயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால்வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது" என்றார்.