Skip to main content

"கூடவே இருந்தார், அவரை ரொம்ப மிஸ் பண்றேன்" - கலங்கிய இயக்குனர் ஹரி

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் அதிரடிக்கும் சத்தத்துக்கும் பெயர் பெற்ற இயக்குனர் ஹரியின் 'சாமி ஸ்கொயர்' நாளை (21-09-2018) வெளியாகிறது.

 

director hari priyan



2003ஆம் ஆண்டு வெளிவந்து பெரு வெற்றி பெற்ற சாமி படத்தின் அடுத்த பகுதி இது. ஹரியின் படங்களில் கார்கள் பறக்கும், ஆக்ஷன் தெறிக்கும். அப்படி அவர் டாடா சுமோக்களை பறக்கவிட்ட காலத்திலிருந்து குவாலிஸ், ஸ்கார்பியோ என மாறி இப்போது ஃபார்ச்சியூனர் காரை பறக்கவிடும் வரை அவர் கூடவே ஓடி ஓடி படம் பிடித்தவர் ஒளிப்பதிவாளர் ப்ரியன். ஹரியின் முதல் படமான 'தமிழ்' தொடங்கி 'சிங்கம் 3' வரை ஹரியுடன் பயணித்தவர். கடந்த ஆண்டு திடீரென்று நெஞ்சு வலியால் மரணமடைந்தார். நாளை வெளியாக உள்ள சாமி ஸ்கொயர் குறித்து ஹரியிடம் பேசிய போது, இடையில் ப்ரியன் நினைவை பகிர்ந்தார்.

"சேரன் இயக்கிய 'தேசிய கீதம்' படத்துக்காக ஒரு பாடல் காட்சியை இயக்குனர் சரண் இயக்கினார். அப்போது நான் சரணிடம் பணியாற்றினேன். டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போதுதான் ப்ரியனை முதல் முறையாக சந்தித்தேன். நல்ல மனிதர், அன்பானவர். சில நாட்கள் மட்டுமே ஒன்றாக வேலை செய்தோம். ஆனால், அந்த நட்பு அடுத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாகப் பயணிக்க அடித்தளமாக அமைந்தது. தமிழ் படத்தில் தொடங்கி, கிட்டத்தட்ட நாங்கள் எப்போவும் ஒன்னாதான் இருந்தோம். ஷூட்டிங்கப்போ மட்டுமில்ல, ஒன்னா டிராவல் பண்ணுனோம், ஒன்னா லொகேஷன் பாக்கப் போனோம். எக்கச்சக்கமா பேசியிருக்கோம். கார்லயும் சரி, ஃப்ளைட்லயும் சரி, என் பக்கத்துலயேதான் உட்கார்ந்திருப்பார். அப்படி இருந்துட்டு, இப்போ அவர் இல்லைன்னு நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று நெகிழ்ந்தார்.         

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Hospital explanation about actor Vikram's health!

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் விரைவில் விக்ரம் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

விக்ரம் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிய நிலையில் அவரின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, சியான் விக்ரமிற்கு லேசான மார்பு அசௌகரியம் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.


 

Next Story

திரை தீ பிடிக்கும்னு பாடுனாங்களே அது இது தானோ? விக்ரம் ஓடிய தியேட்டரில் நடந்த சம்பவம்!

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

Fans leaving the theater fast!

 

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிக் கொண்டிருந்த போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றி எரிந்தது. 

 

புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் திரையிடப்பட்டது. இரவு காட்சியில் ஏராளமானோர் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திரையரங்கின் திரை திடீரென தீப்பற்றியது. இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் வேகமாக திரையரங்கை விட்டு அலறியடித்தபடி வெளியேறினர். 

 

தகவலறிந்து தீயணைப்புத்துறையினர், அங்கு வருவதற்குள் திரை முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்த விபத்திற்கு மின்கசிவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.