இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாபடத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது.
சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின்க்ளிம்ப்ஸ் மற்றும் மேக்கிங் வீடியோரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்துநடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த முக்கியதகவலைஇயக்குநர் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில்பகிர்ந்துள்ளார். அதில், "அஜித்தின் அடுத்த படம், உலக அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாக இருக்கும். இப்படம் 'வலிமை' படத்தைப் போன்றுஅல்லாமல், ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும், வசனங்கள் அதிகமாகவும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.