Advertisment

”ஓடிடி வாய்ப்புகள் வந்தும்கூட...” - அருண் விஜய்யின் காத்திருப்பை பாராட்டிய இயக்குநர்

GNR Kumaravelan

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் ட்ராமா படம் ’சினம்’. இப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

நிகழ்வில் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன் பேசுகையில், “என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலம். கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்ததுவிஜயகுமார் சார்தான். சில ஓடிடி வாய்ப்புகள்கூட வந்தன. ஆனால், படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisment

arun vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe