/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dhanya.jpg)
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் நடிகர் விதார்த்தைவைத்து கார்பன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்தில் நடித்த மூர்த்தி, வினோத் சாகர், மாரிமுத்து, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் இப்படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படம்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் சீனிவாசன் கூறுகையில்," கதாநாயகன் விதார்த்துக்கு ஒரு நாள் கனவு வருகிறது.அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்த நாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்த மாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது.அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் 'கார்பன்' எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்துமுதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? என்று இயக்குனரிடம் கேட்டபோது "இப்போதெல்லாம் இயக்குநர் , நடிகர் , தயாரிப்பாளர் எல்லோருமே காம்பினேஷன் இருந்தால்தான் படம் பண்ணவே வர்றாங்க. கதையை மட்டும் நம்பி வர்றது சிலபேர்தான். அப்படி எனக்கு கிடைத்தவர்தான் 'பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் ' ஜோதி முருகன்-பாக்கியலட்சுமி இரண்டு பேரும். ரெண்டு பேருமே நண்பர்கள்தான். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.லாக்டவுனுக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்தக் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று ஆரம்பித்து இதோ ரிலீஸுக்குரெடி படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் என் படத்துக்கு கிடைத்த வெற்றி" எனப் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)