‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பரமசிவன் பாத்திமா’ படத்திலே ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ‘ஆட்டி’ என்கிற படத்தில் கதையின் நாயகனாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் தி.கிட்டுவின் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் நடித்தது மட்டும் இல்லாமல் தயாரித்தும் உள்ளார். ‘அயலி’ வெப் சீரிஸ் புகழ் அபி நட்சத்திரா கதாநாயகியாக நடித்திருக்க, காதல் சுகுமார், சௌந்தர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
எங்கள் குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஊட்டி, குன்னூர் பகுதியைச் சுற்றியுள்ள, இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத வனப்பகுதிகளிலும் மற்றும் காரைக்குடியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக சொலப்படுகிறது. விரைவில் வெளியாகும் விதமாக தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/05/464-2025-07-05-12-57-39.jpg)