அனூப்சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து கடந்தபிப்ரவரி மாதம் வெளியான மலையாள படம்'வரனேஅவஷயமுண்டு'. இந்த படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்கப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் அண்மையில் ஓடிடிஃபிளாட்பார்மில் வெளியானது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் படத்தை தவறுதலாக தகுந்த அனுமதியின்றி வைத்ததால் பெரும் சர்ச்சையானது. பிறகு அவரிடம்மன்னிப்புக் கேட்டார்துல்கர் சல்மான். இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை உருவெடுத்துள்ளது.
அந்த படத்தில்சுரேஷ் கோபி வளர்க்கும் நாயின் பெயர் பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த காமெடிகாட்சிதமிழ் பயனர்களின் மனதைகாயப்படுத்தியதால் இணையத்தில் 'வரனேஅவஷ்யமுண்டு' படக்குழுவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு துல்கர் சல்மான்மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து துல்கர்மன்னிப்பு கேட்டு இணையத்தில் பதிவை பதிவிட்டார். இந்நிலையில் துல்கருக்கு ஆதரவாககண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிஆதரவாகசமூக வலைதளத்தில்பதிவிட்டுள்ளார். அதில்,"எனக்கு துல்கரைஐந்து வருடங்களாக தெரியும். தமிழர்கள் மீது துல்கருக்கு மரியாதை உண்டு. பார்க்கின்ற பார்வையாளர்கள் மனது புண்படாத அளவு இருக்க வேண்டும் என்பதில்மிக தெளிவாக இருப்பவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.