Sivaji Ganesan

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கௌரவப்படுத்தும் வகையில் அவரது பிறந்த தினமான இன்று (01.10.2021) சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. வரலாற்றின் முக்கிய நாட்களை நினைவுகூர்வதற்காகவும், அரசியல் தலைவர்கள், கலைத்துறையினர், அறிவியல்துறையினர் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கௌரவிப்பதற்காகவும் இதுபோன்ற டூடுலை கூகுள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், சிவாஜி கணேசனின் 94வது பிறந்த தினமான இன்று இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

சிவாஜி கணேசனுக்கு கிடைத்த இந்த கௌரவத்தை அடுத்து, ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்திவரும் நிலையில், கூகுள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "இன்று நடிகர் திலகத்தின் பிறந்தநாள். இந்நாளை சிறப்பித்த கூகுள் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் சிம்மக்குரலோனுக்கு இவ்வுலகம் உள்ளவரை மரியாதை கிடைக்கும். அதுவே திறமைக்கு இவ்வுலகம் தரும் அங்கீகாரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment