"அனைவரின் அன்போடு இனிய துவக்கம்" - புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சேரன்

director cheran starring new movie update out now

கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சேரன், ‘வெற்றிகொடிக்கட்டு’, ‘ஆட்டோகிராஃப்’, ‘தவமாய் தவமிருந்து’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் சேரன் படம் இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்தவகையில்,இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் கௌதம் கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் சேரன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநரும் தயாரிப்பாளருமான இசக்கி கார்வண்ணன் இயக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் அறிமுக போஸ்டரை இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

cheran
இதையும் படியுங்கள்
Subscribe