உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையைசேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலை புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பலர் தங்களின் கண்டன குரல்களை எழுப்பினார்கள். உடலை புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

cheran

Advertisment

இதனையடுத்து நடிகர் விஜயகாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தரவில்லை என்றாலோ, பிரச்சனை செய்தாலோ தன்னுடைய சொந்த கல்லூரியில் இடம் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் விஜயகாந்தின் இந்த செயலை பாராட்டி, "வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலைப் பாராட்ட.... வாழவேண்டியவரும், வாழவைக்க வேண்டியவரும் நீங்கள்தான் கேப்டன்... உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக்கொண்டீர்கள். கரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த, இலக்கியங்கள் காணாத வள்ளல்" என்று ட்விட்டரில்இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.