
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தனது 45ஆவது பிறந்தநாளைக் கடந்த ஜூன் 22ஆம் தேதி கொண்டாடினார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது பிறந்தநாளை பெரிய நிகழ்ச்சிகளாகநடத்த வேண்டாம், இந்தக் காலகட்டத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவுங்கள் என்று விஜய் தரப்பில் அவருடைய ரசிகர்களிடம் வேண்டுகோளாக வைக்கப்பட்டது.
மேலும், அன்றைய நாளில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். அதில் ஒரு ரசிகர் விஜய் 'ஆட்டோகிராஃப்' படம் குறித்து பேசிய பழைய வீடியோவை பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவிற்கு தனது கருத்தை சேரன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “பிரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய பாராட்டியதை மறக்க முடியாது. அதற்குப் பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒப்புக்கொண்டார். நான்தான் 'தவமாய் தவமிருந்து' படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.
அந்தத் தவறை நான் செய்திருக்கக் கூடாது. இந்தத் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். இந்தத் தவறுக்கான வருத்தத்தை விஜய்யைப் பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.
அவரிடம் 'ஆட்டோகிராஃப்' கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்தத் தன்மை.வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தைத் தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான். அவ்வளவு டெடிகேஷன்.அதுவே இன்று அவரின் உயரம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
