இயக்குநர் சேரன் இயக்கி நடித்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியானது. இன்றளவும் தனி ரசிகர் கூட்டத்தினைக் கொண்டுள்ள இப்படம்வெளியாகி இன்றுடன் (19.02.2021) 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை,காலை முதலே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "17 வருடங்கள் ஆனாலும் இன்னும் 'ஆட்டோகிராப்' திரைப்படத்தைப் புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வலைதள நண்பர்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ஆட்டோகிராப் திரைப்படத்தை புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வளைதள நண்பர்களுக்கும் நன்றி.. #17thYrsOfAutographpic.twitter.com/YHBnRzW3F9
— Cheran (@directorcheran) February 19, 2021