Advertisment

"ஏன் என்னை பற்றியே பேசுறீங்க.." - இயக்குனரிடம் அஜித் செல்லக் கோபம்

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்.

Advertisment

charan

இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ஆரவ், காவ்யா தாப்பர், இயக்குனர் சரண் உள்ளிட்டோர் கூட்டாக பேட்டியளித்தனர். அதில் நடிகர் அஜித் குறித்து பேசவே மாட்டேன் என்றுதீர்மானமாக சரண் தெரிவித்துவிட்டார்.

பேட்டியின் இறுதியில் ஏன் அவ்வாறு சொன்னேன் என்று இயக்குனர் சரண் தெரிவித்தார். அதில், “சமீபத்தில்கூட அவரு (அஜித்) செல்லமா சொன்னாரு ஏன் என்னைய பற்றியே பேசிட்டு இருக்கீங்க, வந்திருக்கவங்க எல்லாரபற்றியும் கொஞ்சம் பேசுங்க அப்படினு சொன்னார்” என்று கூறினார்.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe