தினேஷ் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி பெரிதும் பாராட்டைப் பெற்ற படம் குக்கூ. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜூ முருகன்.

Advertisment

raju  murugan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்தப் படத்தைத் தொடர்ந்து குரு சோமசுந்தரத்தை வைத்து ஜோக்கர் என்றொரு படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில் அவர் பேசிய அரசியல் அனைவரது மனதிலும் ஆணி அடித்ததுபோல இறங்கியது. அத்தனை துயரமான கருவை, நம் மனதில் வெளிப்படையான அரசியல் வசனங்கள் மூலம் இறக்கினார். இத்திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.

இதனை அடுத்து ஜாதி, மதம், ஊரின்றி நாடு முழுவதும் சுற்றும் தேசாந்திரிகளை அடிப்படையாக வைத்து, அதன்பின்னே இந்தியாவில் நடைபெற்ற குஜராத் கலவரத்தைப் பின்னணியாக வைத்து மூன்றாவதாக எடுக்கப்பட்ட படம் ஜிப்ஸி. படத்தில் பேசப்பட்ட, காட்டப்பட்ட வெளிப்படையான அரசியலால் ஒரு வருடம் தாமதமாகி வெளியானது. இதில் நடிகர் ஜீவா, நடாஷா சிங், சன்னி வெயின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

Advertisment

தற்போது இயக்குனர் ராஜூ முருகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மனைவி ஹேமா சின்ஹா. இந்தத் தகவலை அறிந்த திரையுலகினர் இயக்குனருக்கும் அவருடைய மனைவிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.