Advertisment

"சோத்துக்கே வழியில்லாமல் தெரு தெருவாக அலைந்தேன்" - இயக்குநர் பாரதிராஜா

director bharathiraja talk about company film

ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 'கம்பெனி' படக்குழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Advertisment

இவ்விழாவில் பேசிய பாரதிராஜா, "என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கன்னா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்களைப் பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது" என்றார்.

tamil cinema bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe