/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/indian_1.jpg)
தமிழ்சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ‘ஆன்டி இண்டியன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்தபிறகு சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத்தடை விதித்தனர்.அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி மூலம் படத்தின் தடை நீங்கிவரும் 10ஆம்தேதி‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில்,'ஆன்டி இண்டியன்' படத்தின் ப்ரிவியூகாட்சியைப் பார்த்த இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இப்படம் தொடர்பாக இயக்குநர்பாரதிராஜா கூறுகையில், “எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நீ இந்தப் படத்தை இயக்கியது என்னால் நம்பவே முடியவில்லை. இதுவரை நீ விமர்சித்த படங்களுக்குத் தகுதியானவன் என நிரூபித்துக் காட்டிருக்கிறாய். படம் நன்றாக இருந்தது, படக்குழுவினர் அனைவருக்கும்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)