Advertisment

"என்றும் அவன் தோற்பதில்லை!" - பாரதிராஜா நெகிழ்ச்சி

Advertisment

சமூகஊடகங்களில் அதிரடியான, வித்தியாசமான, வினோதமான விஷயங்கள் வைரலாவது உண்டு. இடையிடையே சில அற்புதமான,அழகானவிஷயங்கள் வைரலாவதுமுண்டு. அப்படித்தான் கடந்த வாரத்தில்ஒரு சின்ன, அழகான வீடியோ ஓவியம் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலராலும் பகிரப்பட்டு, பாராட்டப்பட்டது. அதை உருவாகியிருந்தவர் 'மனசெல்லாம்' திரைப்படத்தின் இயக்குனரும் ஓவியருமான சந்தோஷ். ஏற்கனவே இயக்குனர்லிங்குசாமி, நடிகர் சூரிஉள்ளிட்ட பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டியிருந்தார்கள். தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா, அந்த வீடியோவை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

Advertisment

"கலைஞனின் வெற்றி தோல்வி எல்லாம் வெற்று வார்த்தைகள்தான்,வாழ்வில் என்றும் அவன் தோற்பதில்லை. இயற்கை கொடுத்த நொடிப்பொழுதையும் காவியமாக ஒரு கதை சொல்லி"மனசெல்லாம்" கொள்ளையடித்துச் சென்ற சந்தோஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..." என்று ட்வீட்செய்துள்ளார். பாரதிராஜாவின் பாராட்டுக்குமுக்கியத்துவமுள்ளது. ஏனெனில் அந்த வீடியோவின் பின்னணியில் ஒலிக்கும்'புத்தம் புது காலை' பாடல் பாரதிராஜாவின் 'அலைகள்ஓய்வதில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

Bharathi Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe