Skip to main content

பாரதிராஜாவை யோசிக்க வைத்த விஜய் ஆண்டனி

 

 Director Bharathi Raja Speech at Pichaikkaran 2 Pre Release Event

 

'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு  சிறப்பித்தார்.

 

நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, “பெயர் தான் பிச்சைக்காரன். அனைத்து துறைகளிலும் இந்தப் படம் ரிச்சாக வந்திருக்கிறது. நல்ல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஏன் நடிக்க வந்திருக்கிறார் என்று நான் யோசித்திருக்கிறேன். பிச்சைக்காரன் படம் பார்த்த பிறகு நான் எண்ணியது தவறு என்பது புரிந்தது. பார்ப்பதற்கு அப்பாவியாக இருந்தாலும் படத்தில் மிரட்டியுள்ளார் விஜய் ஆண்டனி. அவருடைய திருமண வாழ்க்கையிலும் திரைப்படத்திலும் புரட்சி செய்துள்ளார் விஜய் ஆண்டனி. சசி ஒரு அருமையான கதாசிரியர். அவருடைய 'பூ' படத்தைப் பார்த்து நான் மிரண்டு போனேன். ஒரு படத்தின் வெற்றிக்கு கதை தான் மிகவும் முக்கியம். அதில் எனக்கு நிறைய உதவியவர் பாக்யராஜ். 

 

விஜய் ஆண்டனிக்கு இது இரண்டாவது வாழ்க்கை. பாத்திமாவின் பிரார்த்தனைகளோடு ரசிகர்களின் பிரார்த்தனையும் சேர்ந்து அவரைக் காப்பாற்றியிருக்கிறது. பாத்திமாவுக்கு பெரிய நன்றி. எனக்கும் இது இரண்டாவது வாழ்க்கை தான். கலைஞனின் வாழ்க்கையைக் கடவுள் சீக்கிரம் முடிக்கமாட்டார். விஜய் ஆண்டனி இன்னும் நிறைய படங்கள் செய்வார். வெற்றி பெறுவார்.” என்றார்.