/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Bak out.jpg)
'பிச்சைக்காரன் 2'படத்தின் முன் வெளியீட்டு விழாசென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “விஜய் ஆண்டனி கடலில் மூழ்கும்போது கடலுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றியது இந்தப் படத்தின் ஹீரோயின் தான். அவருக்கு என்னுடைய முதல் மரியாதை. அர்ஜுன் என்கிற அசிஸ்டெண்ட் கேமராமேனும் இணைந்து விஜய் ஆண்டனியைக் காப்பாற்றினார். அவருக்கும் என்னுடைய வணக்கங்கள். சினிமாவில் நுழைந்தபோது நான் எப்படி அமைதியாக, ஒருவித பதற்றத்தோடு இருந்தேனோ, அப்படி ஒரு நிலையில் தான் விஜய் ஆண்டனியை நான் முதல் முதலாக சந்தித்தேன். என்னிடம் மிக அமைதியாகப் பேசினார்.
இசை, நடிப்பு, இயக்கம் என்று இப்போது அனைத்திலும்பரிணமித்து வரும் விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது என்னையே நான் நினைத்துக் கொண்டேன். முதல்முறையாக திரைப்படம் இயக்கியுள்ள விஜய் ஆண்டனி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்தாலே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அனைவருக்கும் ஏற்படும். நிச்சயம் இந்தப் படம் வெற்றியடையும். இயக்குநர் சசி பல புதிய முகங்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் ஒரு நல்ல இயக்குநர் மட்டுமல்ல, நல்ல மனிதர்.
Follow Us