Skip to main content

விஜய் ஆண்டனியை காப்பாற்றியது இவர்தான்; ரகசியம் உடைத்த இயக்குநர் பாக்யராஜ்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Director Bhagyaraj  Speech at Pichaikkaran 2 Pre Release Event

 

'பிச்சைக்காரன் 2' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 

நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “விஜய் ஆண்டனி கடலில் மூழ்கும்போது கடலுக்குள் குதித்து அவரைக் காப்பாற்றியது இந்தப் படத்தின் ஹீரோயின் தான். அவருக்கு என்னுடைய முதல் மரியாதை. அர்ஜுன் என்கிற அசிஸ்டெண்ட் கேமராமேனும் இணைந்து விஜய் ஆண்டனியைக் காப்பாற்றினார். அவருக்கும் என்னுடைய வணக்கங்கள். சினிமாவில் நுழைந்தபோது நான் எப்படி அமைதியாக, ஒருவித பதற்றத்தோடு இருந்தேனோ, அப்படி ஒரு நிலையில் தான் விஜய் ஆண்டனியை நான் முதல் முதலாக சந்தித்தேன். என்னிடம் மிக அமைதியாகப் பேசினார். 

 

இசை, நடிப்பு, இயக்கம் என்று இப்போது அனைத்திலும் பரிணமித்து வரும் விஜய் ஆண்டனியைப் பார்க்கும்போது என்னையே நான் நினைத்துக் கொண்டேன். முதல்முறையாக திரைப்படம் இயக்கியுள்ள விஜய் ஆண்டனி, இந்தப் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்தாலே படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அனைவருக்கும் ஏற்படும். நிச்சயம் இந்தப் படம் வெற்றியடையும். இயக்குநர் சசி பல புதிய முகங்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் ஒரு நல்ல இயக்குநர் மட்டுமல்ல, நல்ல மனிதர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா பாடல் உரிமம் விவகாரம் - விஜய் ஆண்டனி பதில்

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
vijay antony about ilaiyaraaja copy wright issue

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருக்க பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதையொட்டி டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “நடிக்க வந்ததிலிருந்து மற்ற படங்களுக்கு இசையமைப்பது குறைந்துவிட்டது. இந்த வருட இறுதியில் மத்த படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார். 

மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவிற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு, “ராஜா சாரின் கம்பெனியில் உள்ள பாடல்களுக்கு அவர் தான் உரிமையாளர். மற்ற விஷயங்களுக்கு இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக படக்குழு கேட்டிருந்திருக்கலாம். படம் வெற்றி பெற்றவுடன் கமலை பார்த்தது போல் இளையராஜாவையும் பார்த்திருந்தால் இந்தளவிற்கு போயிருக்காது என நினைக்கிறேன். உண்மையாக என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ராஜா சார், முன்னதாக சொந்தமாக ஆடியோ லேபிள் வைத்திருந்தார். எகோ கம்பெனியின் உரிமையாளரும் அவர் தான் என நினைக்கிறேன். அவர் நண்பரின் பெயரில் நடத்திட்டு வந்தார். உரிமம் உள்ள பாடல்களுக்கு மட்டும் தான் அவர் ராயல்டி கேட்கிறார் என நினைக்கிறேன்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பாடலுக்கான் உரிமம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் கேட்டு பயன்படுத்தலாம். பிச்சைக்காரன் 2, கொலை, திமிரு பிடிச்சவன் ஆடியோ உரிமம் என்கிட்ட தான் இருக்கு. நானும் ஒரு ஆடியோ கம்பெனி நடத்தி வருகிறேன். அந்தப் பாடலை பயன்படுத்த நினைத்தால் என்னிடம் கேட்கலாம்” என்றார். 

Next Story

ரிலீஸூக்கு தயாரான விஜய் ஆண்டனி படம்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
vijay antony Mazhai Pidikkatha Manithan release update

விஜய் ஆண்டனி கடைசியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அக்னி சிறகுகள், ஹிட்லர், காக்கி, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் எனப் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விஜய் மில்டன் இயக்க கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனிக்கிறார்.

'இன்ஃபினிட்டி ஃபிலிம்' நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. முன்னதாக இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் நீண்ட காலமாகி எந்த அப்டேட்டும் வராத நிலையில் இப்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டீசர் மே 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.