தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் சீமான் தனது 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் இமயம் பாரதிராஜா சீமானுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா ட்விட்டரில், “உனக்கான காலம் வெகு தூரம் இல்லை. எதற்கும் ஆரம்பம்,முடிவு என்று காலம் அமையும். தமிழ் இனத்துக்கான உன் போரட்டம் ஆரம்பித்து வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது... இன்னும் சில நாட்களில் தமிழ் இனத்துக்கான உன் போரட்டத்தின் முடிவும் தமிழகத்திற்கு சாதகமாக அமையும்... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு பிள்ளையே” என்று பதிவிட்டுள்ளார்.
சீமான் நடிப்பில் மிக மிக அவசரம், தவம் ஆகிய இரண்டு படங்கள் இன்று வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.