Advertisment

ரகசிய திருமணம் தொடர்பான வழக்கு - நடிகைக்கு தடை விதிப்பு

director Balaji Mohan confirms second marriage with Dhanya Balakrishnan

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன் தனுஷை வைத்து 'மாரி' மற்றும் 'மாரி 2' படத்தை இயக்கி பிரபலமானார். இயக்கம் மட்டுமின்றி 'ஓபன் விண்டோ' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான 'மண்டேலா' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரை வைத்து 'காதல் கொஞ்சம் தூக்கலா' தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார்.

Advertisment

இதனிடையே பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு டிவி நடிகை கல்பிகா கணேஷ்ஒரு பேட்டியில் தெரிவித்தார். மேலும் பட ப்ரோமோஷனில் தன்யா பாலகிருஷ்ணாவை கலந்துகொள்ள விடாமல் பாலாஜி மோகன் கட்டுப்படுத்துகிறார் எனக்குற்றம் சாட்டினார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து பாலாஜி மோகன், நடிகை கல்பிகா கணேஷ் அவதூறு பரப்புவதாகக் குறிப்பிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ள எனக்கும், 7 ஆம் அறிவு, ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணாவுக்கும் கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் நடந்தது. இணையத்தொடர்களில் நடித்து வரும் தெலுங்கானாவைச் சேர்ந்த நடிகை கல்பிகா கணேஷ்எங்களின் திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட கல்பிகா கணேஷுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வாதத்தைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த நடிகை கல்பிகா கணேஷுக்கு தடை விதித்து வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

இயக்குநர் பாலாஜி மோகன், ஏற்கனவே அருணா என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் கொடுத்திருக்கும் மனுவைப் பார்க்கையில், நடிகை தன்யாவை இரண்டாவதாகரகசியதிருமணம் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

dhanya balakrishna balaji mohan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe