இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளன. மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா கவனித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இப்படம் கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரீமியர் செய்யப்பட்டது. இப்போது ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, வெற்றிமாறன், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பாலா பேசுகையில், “படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை தனியாக அழைத்து பேசினேன். அவர்தான் இந்தப் படத்தின் இயக்குநர் போல அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு, படத்திற்கு எதாவது பண்ண வேண்டும் என துடித்துக்கொண்டு இருந்தார். அதே எண்ணம்தான் எனக்கும் ஒடிட்டு இருந்தது. படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு நீங்கள் என்ன பண்ண வேண்டுமோ பன்னுங்கள். நானும் என்னால் முடிந்ததை செய்கிறேன் என மாரி செல்வராஜிடம் சொன்னேன். அதனால் திரைப்பட விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரி இயக்குநர் தமிழ்நட்டுக்கு வேண்டும்” என்றார். 

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன், “ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப். சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ' என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது' என்றார். 'தங்கமீன்கள்' படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.