Skip to main content

“திருட்டுன்னு சொன்னாலும் அதை ஒத்துக்க மாட்டேங்கிறாங்க”- பாக்யராஜ் ஆவேசம்

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

தமிழ் சினிமா வரலாறு புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குனர் பாக்யராஜ், பார்த்திபன், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

bakyaraj

 

 

இந்நிலையில் வெளியீட்டு புத்தகம் குறித்து பேசிய பாக்யராஜ் இறுதியாக தமிழ் சினிமாவில் நடக்கும் கதை திருட்டு குறித்து பேசினார்.

அப்போது பேசுகையில், “நடிகர் ராஜேஷ் சொன்னார், நான் யாரிடம் இருந்து எடுத்தேன் என்று சொல்லிவிட்டால், அது திருட்டு கிடையாது என்று. ஆனால், இப்போது திருட்டு என்று சொன்னாலும் கூட ஒப்புக்கொள்ளவே மறுக்கிறார்கள். அதைக்கூட நான் திருட்டு என்று சொல்லவில்லை, இதுவும் அதுவும் ஒற்றுமையாக இருக்கிறது. அப்படி செய்தவர்களை கொச்சைப்படுத்த கூடாது என்றும், கௌரவ குறைச்சலாக நடத்தக் கூடாது என்றும், தெரிந்தோ தெரியாமலோ உன்னமாதிரியே அவருக்கு ஒரு யோசனை வந்து, உன்னைபோன்றே காட்சி அமைத்துவிட்டார். இது தொடக்கமும் ஒன்றாக இருக்கிறது, நடுவிலும் ஒன்றாக இருக்கிறது, இறுதியிலும் ஒன்றாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர் உங்களுக்கு முன்பாகவே சங்கத்தில் இதை பதிவு செய்துவிட்டார் என்று நாம் சொன்னால். அதுக்கு நான் எப்படி ஒப்புக்கொள்வேன் என்று பதிலளிக்கின்றனர். இப்படி பேசுபவர்களிடம், என்றைக்காவது இவர்களை ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? . சில கேரக்டர்கள் அப்படி இருக்கிறது. எங்க ஊரிலெல்லாம் அந்த காலத்தில் சினிமா என்று சொன்னால் பெல்ட் எடுத்துக்கொண்டு அடிக்க வருவார்கள். சினிமா ஒரு நல்ல தொழில் என்பதை புரிந்துகொள்ளவே ரொம்ப நாட்கள் ஆனது. அதன்பின் தான் இந்த விசுவல் கம்யூனிகேஷன் படிப்பெல்லாம் வந்தது. இப்போது கரெக்ட்டா படம் எடுங்கனு அடிக்கணும் போல இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்