director atlee joining vijay in next movie

Advertisment

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின்முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

சமீபத்தில், விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிபள்ளிஇயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாகக்கூறப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="07141293-3d59-4780-bb7f-3bafc2d5a141" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_3.jpg" />

Advertisment

இந்நிலையில் 'தளபதி 68' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள்கூட்டணியில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குநர்அட்லீ தற்போது ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கி வருவதால், இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு விஜய் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகளைத்தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.