விஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நயன்தாராவை தவிர மற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
விஜய்யை வைத்து அடுத்து படம் இயக்கப்போகும் லோகேஷ் கனகராஜும் இவ்விழாவில் கலந்துகொண்டார். மேடை ஏறிய பிரபலங்கள் அனைவரும் நடிகர் விஜய்யை குறித்தும், அவர் செட்டில் எப்படி நடந்துகொள்வார் என்பதையும் சிலிர்த்து பேசி சென்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியும் நடைபெற்றது. இப்படத்தின் இயக்குனர் அட்லி பேசுகையில், “மெர்சல் படத்திற்கு பிறகு பிகில் பண்றதுக்கு முழு காரணம் என்னோட அண்ணன் தான். எல்லோருக்கும் ஃபேவரைட் ஹீரோ இருப்பாங்க, எனக்கு எப்போமே இவர் தான். ஒரு பயங்கரமான லைன் மாட்டியிருக்குனு விஜய் அண்ணா கிட்ட சொன்னேன். கதை கேட்டுட்டு, ஏஜிஎஸ் கூட பண்ணலாம்னு நம்பர் கொடுத்தார்.
அப்போது அவர் ஷாருக்கானுடன் இருக்கும் மீம் போட்டுகாட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆங்கிலம் தமிழ் எல்லாம் அறிவு கிடையாது, மொழி. அதே மாதிரி கருப்பு, வெள்ளை கலர் தா அழகு இல்லை'' என்றார்.