Advertisment

நடிகர், நடிகைகளே உஷார்... எச்சரிக்கை கொடுத்த பிரபல இயக்குநர்!

ashwin

Advertisment

நயன்தாரா நடிப்பில் உருவான ‘மாயா’, டாப்ஸி நடிப்பில் உருவான ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் அஸ்வின் சரவணன். மேலும், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ‘இறவாக்காலம்’ படம், பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி மோசடி வேலையில் ஈடுபடுபவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி இயக்குநர் அஸ்வின் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி ஐடியின் மூலம் என் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. அவர் அனைவரிடமும் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் கேட்டு வருகிறார். இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடும் முன் உறுதிசெய்துக் கொள்ளுமாறு அனைத்து நடிகர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

alt="sakra" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="432639df-a2af-4f33-b4a1-271c50d46183" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/sakra%20ad_3.jpg" />

Advertisment

இதுதான் என்னுடைய உண்மையான ஐடி எனத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் முகவரியைப் பதிவிட்டுள்ள அஸ்வின் சரவணன், அத்துடன் அந்த நபர் சிலரிடம் உரையாடிய பதிவுகளையும் இணைத்துள்ளார்.

tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe