/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/arjun_7.jpg)
பிரபல இயக்குநர்அருண் வைத்தியநாதனுக்குஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அச்சமுண்டு அச்சமுண்டு, கல்யாண சமையல் சாதம், மலையாளத்தில் மோகன்லால் நடித்த பெருச்சாழி ஆகிய படங்களைஇயக்கியுள்ளார். இவர் கடைசியாக அர்ஜுன் நடிப்பில் வெளியான 'நிபுணன்' திரைப்படத்தைஇயக்கியிருந்தார். இதனைதொடர்ந்து இயக்குநர் அருண் வைத்தியநாதன் தற்போது ஷாட் பூட் 3 என்று குழந்தைகள் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் இயக்குநர் அருண் வைத்தியநாதனுக்கு ஒமிக்ரான்தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான சளி இருமல் இருந்த நிலையில் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.அதில் அவருக்குஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்துஅவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "எனது வீட்டிற்கு புதிய விருந்தாளி வந்திருக்கிறார். அவர் பெயர்ஒமிக்ரான். கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே. சமீபத்தில் வாரணாசி கும்பமேளா பகுதியில் 28 நாட்கள் 169 நபர்களுடன் படப்பிடிப்பை நிறைவு செய்து அமெரிக்க திரும்பிய எனக்குஒமிக்ரான்உறுதி செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)