Advertisment

உருக்கமுடன் பகிர்வு ; பதிவிட்ட உடனே நீக்கிய பிரபலம் 

director arivazhagan about his borrder movie release

அருண் விஜய் மற்றும் இயக்குநர் அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் ரெஜினா கெசண்டரா மற்றும் ஸ்டீபி பட்டேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்' சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் கடந்த 2021ஆம்ஆண்டு வெளியானது. பின்பு பல முறை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் தற்போது வரை வெளியாகவில்லை.

Advertisment

இப்படம் குறித்து அருண் விஜய், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எனது படம்” என கூறியிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் அறிவழகன், இப்படம் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “பார்டர் படத்தின் ஸ்கிரிட் 2018ல் எழுதப்பட்டது. கொரோனா காலகட்டத்தின் போதும் 2021ல் முதல் பிரதியும் ரெடியானது. அதன் பிறகு ஏராளமான ஸ்பை ஜானர் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டன. பார்டர் வெளியாவதற்கு முன் இன்னும், அது போல பல படங்கள் வரும். இது எழுத்தாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கடினமான ஒன்று. ஆனால், பார்டர் படம் நேர்மையான முயற்சியுடன், ஒரு தனித்துவமான உயிர் கொண்ட ஒரு படம் என்று நம்புகிறேன். சிறந்த வெளியீட்டை எதிர்நோக்கியுள்ளேன்," என்று உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

பின்பு பதிவிட்ட சில நிமிடங்களில் அறிவழகன் அதை நீக்கிவிட்டார். அவர் பதிவிட்டு நீக்கியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் அறிவழகன் தற்போது ஆதியை வைத்து சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

arun vijay director arivazhagan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe