அலைபாயுதே படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவடைந்ததையொட்டி இயக்குனர் மணிரத்னம் தனது மனைவியின் சமூக வலைத்தளப்பக்கத்தின் வாயில் ரசிகர்களுடன் 'லைவ்'வாக கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலானது சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடிக்க, பலர் கேட்ட கேள்விகளுக்கு மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார் இயக்குனர் மணிரத்னம்.

Advertisment

alaipayuthey

இந்நிலையில் இந்தப் படம் குறித்து பல பிரபலங்கள் ட்விட்டரில் பகிர்ந்து வரும் நிலையில் இயக்குனர் அறிவழகன் ட்விட்டரில், “இப்போதும் செய்தித்தாள்களில் அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் என்று செய்திகள் வெளியாகிறது. இந்தப் படம் கலாச்சார ரீதியான அதிர்ச்சியை திரையில் கொண்டு பதிவு செய்த விதத்தில் இப்போதும் சிறப்பானதாக இருக்கிறது. அது தான் மணிரத்னம் சார். டிஐ செய்யப்படாத பச்சை நிறமே பாடல் பி.சி.ஸ்ரீராம் அவர்களுக்குள் இருக்கும் கலையை வெளிகாட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஷாலினி உள்ளிட்டோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்து அசத்தினர். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பார்.