Advertisment

போதைப் பொருள் பயன்படுத்தினேனா? இயக்குனர் அனுராக் காஷ்யப் விளக்கம்!

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மக்களிடம் கொண்டுசென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் தங்கள் நண்பர்களுக்குள் வீடியோ காலில் பேசிக்கொள்வதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் அனுராக் காஷ்யப் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

anurag

ட்விட்டர் பயனர் ஒருவர் அனுராக் பேசியிருக்கும் அந்த வீடியோவை மும்பை காவல்துறைக்கு குறிப்பிட்டு, "மும்பை காவல்துறையினரே இதைப் பார்க்கிறீர்களா? இங்கு அனுராக் காஷ்யப் போதை மருந்து உட்கொண்டிருக்கிறார். இது இந்தியாவில் சட்டவிரோதமானது" என்று பகிர்ந்தார்.

Advertisment

இதற்குவிளக்கம் தரும் வகையில் அந்தப் பயனர் குறிப்பிட்ட பதிவில் கமண்ட் செய்திருக்கும் அனுராக், "ஆமாம் காவல்துறையினரே. அதைப் பாருங்கள். முதலும் கடைசியாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் புகையிலையைச் சுருட்டிப் பிடிக்கிறேன். தயவுசெய்து நையாண்டி செய்பவர்களின் திருப்திக்காக நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

anurag kashyap
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe