அரிமா நம்பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த சங்கர். ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநரான இவர் தற்போதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார். விக்ரம் பிரபுவை வைத்து இவர் இயக்கிய அரிமா நம்பி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து விக்ரம் மற்றும் நயன்தாராவை வைத்து இருமுகன் என்றொரு படத்தை இயக்கிநார். இது மிகப்பெரிய ஹிட் அடித்து, முக்கியமான புதுமுக இயக்குநர்கள் லிஸ்டில் இவர் சேர்ந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anand-shankar.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
தென்னிந்தியாவின் சென்ஷேனல் ஸ்டாராக வலம் வந்தவர் விஜய் தேவரகொண்டா. அவர் தமிழ் சினிமாவின் நேரடி படமாக இவர் இயக்கத்தில் நோட்டா என்றொரு அரசியல் படத்தில் நடித்தார். இது தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியானது. தமிழ் சினிமாவில் விஜய் தேவரகொண்டா முதன் முதலாக அறிமுகமானது இப்படத்தில் இருந்துதான்.
இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் சங்கர் திவ்யா ஜீவானந்தம் என்ற பெண்ணை காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களையும் கடந்த நவம்பர் மாதத்தில் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் சில திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)